ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Thursday, November 27, 2014

அமெரிக்காவில் இன்று நன்றி தெரிவிக்கும் நாள் விழா கொண்டாட்டம்!

நியூயார்க்: அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழக்கிழமையன்று நன்றி தெரிவிக்கும் விழா கொண்டாடப்படுகிறது.  ஐரோப்பியர்கள் அமெரிக்கா வந்து குடியேறியபோது வேளாண் பயிர்களை அறுவடை செய்ய உதவிய அமெரிக்கப் பூர்வீகக் குடிகளுக்கு நன்றி தெரிவிக்கவே இந்த  விழா முதன்முதலாக 1921ல் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டின் நன்றி தெரிவிக்கும் நாளில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவர் குடும்பத்தினர், உணவுப்  பொருள்களை மற்றவர்களுக்கு வழங்கி கொண்டாடுகின்றனர்.


ஆனால் இந்த ஆண்டு நிலவும் கடும் குளிர் மற்றும் பனி காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் நன்றி தெரிவிக்கும் நாள் விடுமுறைகளை  அனுபவிக்க முடியாமல்  பலர் தவிக்கின்றனர். இருப்பினும் விழா கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

No comments :

Post a Comment