Saturday, February 7, 2015
வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி விபத்து!
இன்று காலை 5 மணியளவில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி விபத்துள்ளாகியது. செத்தல் ஏற்றிய பார ஊர்தி ஒன்று புளியங்குளத்திற்கும் கனகராயன் குளத்திற்கும் இடையில் புதூர் சந்திக்கு அணித்தாக வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதியதில் மூன்று மாடுகள் பரிதாபகரமாக தலை நசுங்கி இறந்ததுடன் பாரஊர்தி தலைகீழாகப்பிரண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துப்பாரதூரமாக இருப்பினும் தெய்வாதீனமாக மனித உயிரிழப்புக்களோ காயமோ எவருக்கும் ஏற்படவில்லை. பார ஊர்தி கடுமையாக சேதமடைந்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment