ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Tuesday, February 17, 2015

மாஹிர் பவுண்டேசன் மூலம் அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைப்பு

                         
                          எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் சம்மாந்துறை தமிழ் பிரிவு -03இல் அமைந்துள்ள அல்-மத்ரிஸத்துல் பசீலா குர்ஆன் மத்ரஸாவில் கற்கும் வறுமைக் கோட்டின் கீழுள்ள 45 மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் நிதியில் அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
                         அல்-மத்ரஸத்துல் பசீலா குர்ஆன் மத்ரிஸாவின் தலைவி எம்.பசீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், மாஹிர் பவுண்டேன் அமைப்பின் தலைவர் வை.பி.சலீம், ஆசிரியர் எம்.ஐ.றியாஸ், சம்மாந்துறை சிப்ஹா அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.எல்.ஏ.நஸார், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் வெகுஜன மக்கள் தொடர்பு அதிகாரி ரிஸ்வி(நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை காரைதீவு) மற்றும் மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் அலுவலக இணைப்பாளர் எம்.ஜெ.எம்.இர்பான் மௌலவி, பெற்றோர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments :

Post a Comment