கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக அஹமட் நசீர், ஆளுநர் ஒஸ்டின் பெர்னேண்டோ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான அஹமட் நசீர், இம்முறை ஆட்சியில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சராக தமது கட்சியை சேர்ந்தவரே நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments :
Post a Comment