ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Wednesday, February 25, 2015

விஜய் டிவிஇன் பித்தலாட்டம் அம்பலம்

                  விஜய் டிவி நடத்திய சூப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை எந்த போட்டிக்கும் இல்லாத அளவு இந்தவருட போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர். காரணம் ஈழத்துச்சிறுமியான ஜெசிக்கா இந்த போட்டியில் கலந்துகொண்டதால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். ஆனால், இந்த போட்டியில் முறைகேடு நடந்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. அதை உறுதி செய்வது போல் தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

                    உண்மையான வெற்றியாளரை மறைத்து, வேறுசில நோக்கத்துடன் தவறான வெற்றியாளரை திட்டமிட்டு அறிவித்துள்ளது விஜய் டிவி. அந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலரால் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என துல்லியமான பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு...

Total votes 15840172

Jessica 10353440
Anushya 2103555
Spoorthi 1311630
Srisha  1102017
Haripriya 506221
Bharath 463309

விஜய் டிவி இதன்மூலம் சூப்பர் சிங்கர் போட்டியை நேர்மையற்ற முறையில் நடத்தியுள்ளது அம்பலமாகி உள்ளது.

Tuesday, February 24, 2015

சம்மாந்துறையில் மாஹிர் சேர் அவர்களின் அபிவிருத்தி வேலைகள்

கௌரவ மாஹிர் சேர்  அவர்களின் தனிப்பட்ட கவனமெடுப்பின் மூலம் சம்மாந்துறை கல்லரிச்சல் வீதியின் புணர்நிர்மான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர் பீட உறுப்பினரும், சமூக சேவகரும், சவுதி அரேபிய துாதுவராலய மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான ILM. Mahir sir அவர்களினால் பல நாட்களாக குண்டும் குழியுமாக காணப்பட்ட கல்லரிச்சல் பிரதான வீதியின் திருத்த வேலை ஆரம்பிக்கப்பட்டது.
கல்லரிச்சல் பிரதேசவாசிகளின் கோரிக்கைக்கு அமைவாக திருத்தம் செய்யப்பட்ட இவ்வீதியினால் அப்பிரதேச மக்கள் பெரிதும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Friday, February 20, 2015

வளைகுடா வாழ் குறிப்பாக சவூதி அரேபியாவில் பணியாற்றும் சொந்தங்களுக்கு!


                வளைகுடா வாழ் குறிப்பாக சவூதி அரேபியாவில் பணியாற்றும் சொந்தங்களுக்கு! 

உங்களுக்குத் தெரியுமா?

                 சவூதி அரேபியாவின் தட்ப வெட்ப சீதோசன நிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்களா?
இந்த ஆண்டு குறிப்பாக கடந்த சில மாதங்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உடன் களப்பணியாற்றிய சகோதரர்கள் என்று அதிகமான பேர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் உள்ளனர்.

                  ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. அல்-குர்அன்: 3:185

                   உங்கள் உடல் நலனை மாதம் ஒரு முறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

                   சவூதியின் தட்பவெட்ப நிலைப்படி காற்றில் ஈரப்பதம் குறைவு, அடுத்ததாக காற்றில் பிராண வாயும் குறைவு அதன் காரணமாக அதிகமானவர்களுக்கு அலர்ஜி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள் இதனால் நீண்ட காலம் சவூதியில் பணியாற்றியவர்களுக்கு கொலஸ்ட்ரால், ரத்தக் கொதிப்பு, சுகர் என்று எதாவது ஒன்று அன்பளிப்பாகக் கிடைத்திருக்கும்.

                    இதை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் இருந்துவிட்டு பாதிப்பின் கடைசியில் கவனிக்கும் போது அந்த நோய் தனது வீரியத்தோடு எல்லையை தாண்டியிருக்கும்.
சகோதரர்களே! வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரும் எதாவது ஒரு வகையில் மன இருக்கத்துடனேயே இருக்கிறார்கள் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் அதுவும் குடும்பத்துடன் இருப்பவர்களாக இருக்கும். பிரச்சனைகளின் போது இருக்கமான மனநிலையிலிருந்து விடுபட முயற்சியுங்கள். அந்த பிரச்சனையை மறந்து அடுத்த வேலையில் கவனம் செலுத்துங்கள்.

                       மன இருக்கத்தின் போது உடனே தொழுகையை நாடுங்கள்... உங்கள் மனதில் உள்ள குறைகளை சுமைகளை இறைவனிடம் கேளுங்கள் முறையிடுங்கள். மனச்சுமையிலிருந்து விடுதலை பெறுங்கள்...
உங்களை நம்பி உங்கள் உறவுகள் காத்திருக்கின்றன.
மாதம் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து உங்களின் உடல் நலனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு வைத்துக் கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

                        பரக்கத் நிறைந்த பேரிச்சை, ஆலிவ், தேன் போன்ற உணவுகள் தாராளமாக கிடைக்கும் நாடு இது அவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 

Tuesday, February 17, 2015

மாஹிர் பவுண்டேசன் மூலம் அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைப்பு

                         
                          எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் சம்மாந்துறை தமிழ் பிரிவு -03இல் அமைந்துள்ள அல்-மத்ரிஸத்துல் பசீலா குர்ஆன் மத்ரஸாவில் கற்கும் வறுமைக் கோட்டின் கீழுள்ள 45 மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் நிதியில் அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
                         அல்-மத்ரஸத்துல் பசீலா குர்ஆன் மத்ரிஸாவின் தலைவி எம்.பசீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், மாஹிர் பவுண்டேன் அமைப்பின் தலைவர் வை.பி.சலீம், ஆசிரியர் எம்.ஐ.றியாஸ், சம்மாந்துறை சிப்ஹா அமைப்பின் ஸ்தாபகர் எஸ்.எல்.ஏ.நஸார், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் வெகுஜன மக்கள் தொடர்பு அதிகாரி ரிஸ்வி(நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை காரைதீவு) மற்றும் மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் அலுவலக இணைப்பாளர் எம்.ஜெ.எம்.இர்பான் மௌலவி, பெற்றோர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Sunday, February 15, 2015

இலங்கையர் மூவருக்கு சவூதியில் மரண தண்டனை மீட்டுவர செல்கிறார் ஹக்கீம்

           
          யெமன் நாட்டு பிரஜை ஒருவரைக் கொலை செய்து அவரது உடைமைகளை கொள் ளையடித்தார்கள் என்ற குற்றம் நிரூபிக் கப்பட்ட நிலையில் சவூதி அரேபியா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ள இலங்கையர் மூவரை தண்டனை யிலிருந்து விடுவிக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சவூதி செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

           கடந்த 2007 ஆம் ஆண்டு சவூதியில் இடம் பெற்ற இந்தக் கொலை, கொள்ளைச் சம்பவத்தையடுத்து மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் தொடர்பான வழக்கு முடிவுறுத்தப்பட்ட போது மூவரையும் குற்றவாளியாகக் கண்டு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

           குருணாகல், மஹவைச் சேர்ந்த டப்ளியூ. எம். என். பீ. தென்னகோன் (33, தெஹிவளையைச் சேர்ந்த துஷார தினேஷ் பெரேரா (36), ராகமையச் சேர்ந்த கே. ஏ. ஜீ. யூ. நாணயக்கார (34) வயது ஆகியோருக்கே மரண தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது 

நிந்தவூரில் சற்று முன்னர் வாகன விபத்து ! ஒருவரின் நிலை கவலைக்கிடம் !



நிந்தவூரில் சற்று முன்னர் வாகன விபத்து ! ஒருவரின் நிலை கவலைக்கிடம் !

நிந்தவூர் பிரதான வீதியில் (மஸ்ஜிதுல் முஜாஹிதீன் பள்ளிவாசலுக்கு முன்பாக) இன்று (15) சற்று முன்னர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று நேரே மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த அனைவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதில் விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் காணப்பட்டதோடு மற்றுமொருவர் மயக்கமுற்ற நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதேவேளை குறித்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திக்கொள்ள முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து நடந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

 மேலும் விபத்து இடம்பெற்ற இடத்தில் பொலிசாரின் ஜீப் வண்டி தரித்திரிந்தமையினால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொலிசார் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

இதேவேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். (படம்கள் சுலைமான் றாபி )

ஜனாதிபதி மைத்திரி மனைவி தமிழ்ப் பெண்! வெளியானது உண்மைகள்…

இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார். இவரின் பெயர் ஜெயந்தி. மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார். தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.
இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால் மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காண முடிகின்றது. மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இவருடைய காதல் திருமணத்துக்கு ஊக்கிகளாக அமைந்தன.

Saturday, February 14, 2015

றிசானாவின் மரண தண்டனைக்கு காரணம் யார்? வெளியானது ஆதாரம்….

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிசானா நபீக் விவகாரத்துக்கு ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபயக்கோன் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ,
“றிசானா நபீக்கிற்கு வயதைக் கூட்டி போலியான கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு கையொப்பம் இட்டவர் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரேயாவார். சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற றிசானாவுக்கு 2013 ஜனவரி 09ஆம் திகதி சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். பீ.பி.அபேகோன் குடிவரவு கட்டுப்பாட்டாளராக இருந்தபோது கப்பம் பெற்றார். பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு இலங்கை கடவுச்சீட்டு தயாரித்து கொடுத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் அவர் மிகவும் நெருக்கிய உறவை வைத்திருந்தார். றிசானாவை அனுப்பிய முகவரின் வாக்குமூலம் எம்மிடம் உள்ளது” என்றார்

Monday, February 9, 2015

புலிகளின் தாக்குதலுக்குப் பயந்து மகிந்த ராஜபக்சஇன் பதுங்குகுழி

                             சிறிலங்கா அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியிலான பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை பற்றிய பல இரகசியங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியில், பதுங்குகுழி போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
                               சிறிலங்கா அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியிலான பதுங்குகுழி கட்டமைப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை பற்றிய பல இரகசியங்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், அதிபர் மாளிகையில் நிலத்துக்கு அடியில், பதுங்குகுழி போன்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
                                 இவை விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால் போர் நடந்த காலத்தில் கட்டப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. கொங்றீட்டினால் வலுவான முறையில் இந்த நிலத்தடி பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்மாந்துறையில் ஹிருனிகா ஆற்றிய உரையின் சுருக்கம்

சம்மாந்துறையில் ஹிருனிகா ஆற்றிய உரையின் சுருக்கக் குறிப்பும்,முக்கிய சுட்டிக் காட்டல்களும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சார்பாக சம்மாந்துறை வாழ் மக்கள் மைத்திரியை அதரித்தமைக்கு நன்றி செலுத்துமுகமாக ஹிருனிகா வரப்போகிறார் என்ற செய்தியால் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபம் இன்று ஞாயற்றுக் கிழமை 2015-02-08 மக்களால் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.தொழில் அதிபர் ரமீஸ் அவர்களின் ஏற்பாட்டில் 5 மணி அளவில் ஆரம்பமான இன் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினரான ஹிருனிகா,ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்விற்கு வருகை தந்த ஹிருனிகா சில நிமிடங்களில் தனக்கு ஏற்பட்ட களைப்பின் காரணமாக மண்டபத்தை விட்டு வெளியேறினார்.அவரின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து மண்டபம் வெறிச் சோடிக் காணப்பட்டதானது அங்கு கூடி இருந்த மக்கள் ஹிருனிக்காவிற்காகவே கூடி உள்ளார்கள் என்பது தெளிவானது.
ஹிருனிகா தனது உரையில் நாம் தற்போது நாட்டிலிருந்து குடும்ப ஆட்சி ஒன்றை இல்லாதோழித்துள்ளோம்.இதற்கு சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்குகள் மிகவும் உதவி இருந்தன.இதன் மூலம் நீங்கள் ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியை கூறியுள்ளீர்கள்.அது தான் “யார் மகிந்த போன்று நடந்தாலும் இதே நிலை தான் வரும்” என்ற செய்தியாகும்.கடந்த ஆட்சி போன்று ஜனாதிபதி மைத்திரி நடந்தாலும் அவருக்கும் இதே நிலை தான் வரும்.ஆனால்,அவர் அவ்வாறு நடக்க மாட்டார் என்பதனை நான் உறுதியாக கூறிக் கொள்கிறேன்.ஒரு உண்மையான பௌத்தன் இன்னுமொரு மதத்தினை அடி பணிய வைக்கும் ஒரு செயலைச் செய்ய மாட்டன்.நான் ஒரு உண்மையான பௌத்தன்.இதே போன்றே தற்போது தெரிவாகியுள்ள மைத்திரியும் உண்மையான பௌத்தத் மதத்தினைச் சேர்ந்த ஒருவர்.
இன்று நான் முஸ்லிம் பகுதிகளுக்கு வருவதற்குக் காரணம்.எனக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள நெருக்கமான உறவே ஆகும்.கொழும்பில் என்னைக் கேட்டால் இதனை அறியலாம்.எனது தந்தை பாரத லக்சுமனும் முஸ்லிம்களுடன் நெருங்கி பழகும் ஒருவர்.அப் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் ஏதும் பிரச்சனை என்றால் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் செல்வதனை விட எனது தந்தையிடமே அதிகம் வருவார்கள்.எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது ,எனது சிறு வயதில் பள்ளிப் பிரச்சனை ஒன்றிற்கு கூட எனது தந்தையிடம் முஸ்லிம்கள் முறையிட வந்திருந்தாள்.அந்தளவிற்கு எனது தந்தை முஸ்லிம்களுடன் உறவைக் கொண்டிருந்த ஒருவர்.நானும் அவர் வழியிலேயே உள்ளேன்.
நான் இப் பகுதியின் பல பிரதேசங்களிற்கு சென்று வருகிறேன்.இங்குள்ள பிரச்சனைகள் பற்றி கேட்டறிந்துள்ளேன்.இதனை நிச்சயாமாக ஜனாதிபதியின் மேலான கவனத்திற்கு கொண்டு செல்வேன்.இங்குள்ள மீனவர்கள்,விவசாயிகள் அதிகம் பிரச்சனையினை எதிர் நோக்குகிறார்கள்.வீடுகள் இல்லாமலும், சிறந்த ஆட்சியாளர்கள் இல்லாமலும் இன்னல்களிற்கு உள்ளாகியுள்ளார்கள்.இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற உள்ளது.அதில் நீங்கள் விரும்பும் ஆட்சியாளர்களை தெரிவு செய்து கொள்ளுங்கள்.கடந்த 5 வருடங்களிற்கு பிறகு கூட சிலர் உங்களிடம் வரலாம்.அவர்களிற்கு சிறந்த பாடம் புகட்டுங்கள்.உங்கள் பிரச்னையை என்னிடம் முறையிடுங்கள் .நான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.எனக் கூறினார்.
ஹிருனிகாவினது உரையானது எதிர் வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டுள்ளது என்பனை அவரின் உரை பொதுத் தேர்தலினை மையப் படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகுதியுடைய தலைமகன் அல் ஹாஜ் ஐ.எல்.எம்.மாஹிர் சேர்

                              சம்மந்துரையின் எத்தனையோ பெரிய மனிதர்கள் வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டார்கள் ஆனால் இப்போது சம்மாந்துறையில் வாழ்ந்துகொண்டு இருக்கும் வரலாறு அல் ஹாஜ் ஐ.எல்.எம்.மாஹிர் சேர் அவர்கள் தமது இளமைக்காலத்தில் இருந்து சமுக சேவை சமுக சேவை என்று தமது வாழ்கையை ஏழைகளுக்காகவே அர்ப்பணித்த ஒரு மகன்தான் இந்த மாஹிர் சேர் இவரை யாரும் சேர் போடாமல் அழைத்ததே கிடையாது ஏன் தலைவர் அப்துல் ரஹூப் ஹக்கீம் சேர் கூட மாஹிர் சேர் என்றுதான் சொல்வார் மாஹிர் சேரின் நீதி நேர்மை வாய்மை தூய்மை அறிந்துதான் மக்கள் அவரை மாஹிர் சேர் என்று சொல்லுகின்றார்கள்.
                          அடுத்து அவரின் திறமைக்கு கிடைத்த முன்னுரிமையே அவரை மொறோக்கோவில் நடைபெற்ற இளைஞ்சர் மாநாட்டில் எமது நாட்டின் சார்பாக அழைக்கப்பட்டார் அது எமது மண்ணுக்கு கிடைத்த பெருமை என்றுதான் கூற வேண்டும். அவர் அரசியலில் இல்லாமலே அவரது சொந்தச்செலவில் எத்தனையோ ஏழைக்குடும்பம்கள் இன்று கவலைகளை மறந்து சந்தோசமாக வால்கிற்றனர் இப்போ வருகின்ற தேர்தலில் மக்கள் நல்லதொரு முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்

Saturday, February 7, 2015

நாட்டில் 5000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்

5,026 போலி வைத்தியர்கள் தொடர்பான தகவல்கள், 5 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
22,313 வைத்தியர்களை இந்த ஆய்விற்கு உட்படுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவின் டி சொய்ஸா தெரிவிக்கின்றார்.
வடக்கு, மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மாகாண ரீதியாக நோக்கும்போது, வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐந்து மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ள போலி வைத்தியர்களில் 32 .5% வட மாகாணத்தில் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் சராசரியாக ஐந்து வைத்தியர்களில் ஒருவர் போலியானவர் என்ற தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
போலி வைத்தியர்களை கைதுசெய்து அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருட சிறைத்தண்டனையாவது விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு!

கிழக்கு மாகாணசபையின் புதிய முதலமைச்சராக அஹமட் நசீர், ஆளுநர் ஒஸ்டின் பெர்னேண்டோ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவான அஹமட் நசீர், இம்முறை ஆட்சியில் விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சராக தமது கட்சியை சேர்ந்தவரே நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி விபத்து!

இன்று காலை 5 மணியளவில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி விபத்துள்ளாகியது. செத்தல் ஏற்றிய பார ஊர்தி ஒன்று புளியங்குளத்திற்கும் கனகராயன் குளத்திற்கும் இடையில் புதூர் சந்திக்கு அணித்தாக வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதியதில் மூன்று மாடுகள் பரிதாபகரமாக தலை நசுங்கி இறந்ததுடன் பாரஊர்தி தலைகீழாகப்பிரண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துப்பாரதூரமாக இருப்பினும் தெய்வாதீனமாக மனித உயிரிழப்புக்களோ காயமோ எவருக்கும் ஏற்படவில்லை. பார ஊர்தி கடுமையாக சேதமடைந்துள்ளது.

Getting a Qatari Driving License

Getting a Qatari Driving License
Once you have a Residence Visa for Qatar, you need to get a Qatari Driving License in order to be able to drive in the country. If you currently hold a valid driving license from one of the GCC countries, or from one of the following countries, you can get a Qatari driving license without having to take the driving test.
Andorra, Australia, Austria, Belgium, Brunei, Canada, Denmark, Finland, France, Germany, Greece, Hong Kong, Iceland, Ireland, Italy, Japan, Liechtenstein, Luxembourg, Malaysia, Monaco, Netherlands, New Zealand, Norway, Portugal, San Marino, Singapore, South Korea, Spain, Sweden, Switzerland, United Kingdom, USA and Vatican City.
If you do not a have a license, or you have a license from a country not listed above, you will need to pass the Qatari driving test.
Exchanging your license for a permanent Qatari driving license:
In order to apply for a full-term Qatari driving license, the following documents must be presented at the Madinat Khalifa Traffic Department:
Original license from one of the countries listed above
A letter of no objection/permission from your sponsor, written in Arabic
A copy of your sponsoring company’s trade license
A copy of your sponsor’s ID
Passport (original and copies)
Three passport photos
Qatar ID card
You will need to fill out an application form, which must be typed in Arabic, and signed by your sponsor. Translation typing services are available at Madinat Khalifa Traffic Department for a small fee.
You will also be required to pass an eye test, which can be conducted at the Madinat Khalifa Traffic Department as well. The fee that you pay for the driving license, must be paid by credit card. It includes the cost of the eye test.
It generally takes one working day for your Qatari license to be issued if you already hold a license from one of the countries listed above. The license is valid for five years and will entitle you to drive the type of vehicle specified in your original license.

Madinat Khalifa Traffic Department is located on Khalifa Street.
It is open from 7:00am to 11:00am and 4:00pm to 7:00pm.
For information and enquiries, the traffic department can be contacted on +974 4489 0666. Fax : 44872494.
If you need to apply for a new license:
In the event that you have to apply for a new driving license, an application has to be made to the Traffic Department of the Ministry of Interior. The contact details are:
Ministry of Interior Traffic Department
Tel: +974 4489 0666
Fax: +974 4487 2494
Email: traffic@moi.gov.qa
You will need to fulfill certain requirements and provide the following documents as part of your application:
You must be at least 18 years of age to be eligible for a light driving license or motorcycle license
Completed driving license application form (typed in Arabic)
A no-objection letter from the applicant's sponsor (in Arabic)
A valid passport along with a copy
A copy of your sponsor's ID card
Three recent, coloured, passport-sized photographs
Residence permit
Applying for a Temporary license
You can apply for a temporary license (valid for three months) as an interim measure between using your International Driving License and getting a Qatari license. To do so, you need to follow the same steps outlined for a full license. The documentation required for this isn’t as extensive. You only need to bring:
Original license from one of the countries listed above.
Passport (original and copies)
Three passport photos
There is a fee for a temporary license. It is possible to extend the license when it expires. Those who have temporary licenses are only permitted to drive rental vehicles. This is because insurance on privately-owned vehicles tends not to cover drivers of this status.
The Driving Test
If you don’t have a driving license from one of the countries listed above, you have to take a driving test before you can be issued a Qatari driving license.
Driving tests are administered by authorised driving schools and all applicants need to apply to a driving school for lessons before they can take the test. Those who do not have a driving license are required to take at least:
15 hours of theory classes
35 hours of driving lessons
Expatriates who already have a license (which is not exchangeable) may be able to take the test after sitting through just the theory classes.
Driving tests usually consist of four modules:
An oral theory test where the applicant is asked questions about road signs and traffic regulations in English or Arabic
Reverse parking test
Straight parking test
Road test
An eye test is also necessary, but this is usually done before the theory and practice modules of the test.
Driving tests are usually carried out in manual transmission cars and generally, there are four people to a car. Women take the test with a female traffic police officer. If an applicant passes all modules of the test, the driving license is issued right away and is valid for five years. All modules are carried out on the same day; if an applicant fails any one of the modules they cannot move on to the next module.
If an applicant fails the test, they can usually take the driving test again in a month’s time. Sometimes more driving classes are required in order to be able to appear for another test.
Authorised Driving Schools
Al Rayah Driving School
Tel: +974 4487 7774
Doha Driving Center
Tel: +974 4479 2263
Gulf Driving School
Tel: +974 4465 2822
United Driving Company
Tel: +974 4468 1003
Qatar said to mull driving licence ban for more expats
Qatar is reportedly mulling an extension to plans to limit the number of driving licences issues to expats following last year's ban on labourers.
The Gulf state's Advisory Council is seeking quicker action to address traffic jams in the city and has recommended a series of measures including a review of the current policy on issuing drivers’ licences to expatriates.
Last July, the Department of Traffic issued a circular ordering driving schools to no longer register labourers seeking to obtain a driving licence.
The State Cabinet has asked the National Committee for Traffic Safety to submit the findings of its study on traffic congestion in three months, Qatar daily The Peninsula reported, citing an Al Sharq article.
The committee has also recommended building more multi-storey parking facilities and promoting public transport to reduce the number of private cars.
The committee also recommended redistributing commercial facilities to reduce the congestion in certain parts of the city and encourage more schools to use buses to transport students, the report said.
Companies should be forced to provide buses to transport groups of workers, it added.
The government has reportedly set up a special committee to find quick solution to traffic jams with 138 traffic hot-spots identified across the city.
Driving licence curbs only for limited period
The ban on some categories of expatriate workers from acquiring a driving licence is temporary and will last only until major development projects are completed, says the Traffic Department.
The nature of work of these categories of people is such that they do not “at the moment” need a driving licence, said the director of the department.
“We have a fairly extensive and efficient public transport system so there is no need for these people to seek driver’s licence. Their jobs don’t demand that they drive now,” Brigadier Mohamed Saad Al Kharji said.
“This is a temporary measure. The restrictions would be lifted after major infrastructure projects are over.”
The ban is a necessity today because the current pace of development in the country (arguably, a reference to the exploding population) makes it imperative that such steps are taken to control increasing chaos, congestion and accidents on the roads, Al Kharji said. He was a guest speaker at Al Sharq’s Ramadan tent last Saturday. Replying to questions, the director said his department takes traffic law breaches very seriously and no fine imposed on a violator is ever waived.
“In some violations if it is found that there is some margin of error by a traffic policeman in assessing a traffic accident. In those cases a lenient view can be taken.”
On an average, some 100 driving licences are withdrawn by the traffic police every day due to serious violations of the traffic law.
In Qatar, the minimum age for issuing the driving licence is 19 years while in other countries in the region it is 18.
Brigadier Mohamed Abdullah Al Malki, secretary-general of the National Committee for Road Safety at the Ministry of Interior, was present at the event.
He said that a curriculum of road safety was almost complete for introduction in schools at elementary, preparatory and secondary levels.
“However, it (road safety) wouldn’t be taught as a subject. It would rather be in the form of an awareness campaign.” The official said the traffic law was being studied for a possible review.
Al Kharji said that media interaction as the one at this Ramadan tent should be held every three months since that would help raise awareness on road safety.
He reiterated that major roundabouts in the country will be converted into traffic signals with intersections like the several roundabouts on the Corniche Road are being converted.
Electronic system for driving tests
The Traffic Department will soon introduce an electronic system for the “L” and “parking” tests in driving schools to abolish direct supervision by the policemen.
These two preliminary tests take place in the premises of the driving schools to qualify the trainees for the final road tests. Currently the tests are conducted in the presence of policemen, who are responsible for evaluating the trainees and issuing the results.
Driving schools are now preparing to introduce a new system in which the tests will be monitored electronically from a control room in the driving school. Instead of physically supervising the tests, the policeman will sit in the control room and monitor the test on a computer screen. The result will also be issued based on this assessment.
“We will be implementing the new system very soon. We have already conducted the trial and it was very efficient and successful,” an official of a leading driving school told this daily yesterday.
He said a major advantage of the new system is that the candidates can take the tests without being scared of the presence of policemen. It will also help avoid complaints about bias or favouritism by inspectors supervising the tests.
“Nobody can claim that the evaluation was wrong since there will be solid proof to show how the candidate has performed,” said the official.
There will be censors at the testing grounds which will be linked to CCTV cameras monitoring the tests.
If the car touches the censors during the test, it w ill be captured by t he camera and shown on the large LCD screen in the control room.
The Traffic Department has also plans to install CCTV cameras in the cars used for road tests to accurately monitor the performance of the trainees during the tests and avoid complaints, it has been learnt.        
hanshifbillatamil inayaththalam thanks

Friday, February 6, 2015

RDR நிறுவனத்தின் Travels & Tours திறப்புவிழா நிகழ்வுகள்

                                RDR நிறுவனத்தின் RDR Travels & Tours இன்று மாலை சம்மாந்துறையில் மிகவும் கோலாகலமான முறையில் முன்னாள் அதிபர் அல் ஹாஜ் அபூபக்கர் சேர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
                                இந்நிகழ்வை  சிறப்பிக்கும் முகமாக Pray FM இல் இந்நிகழ்வு நேரலையாக ஒளிபெரப்பு செய்யப்பட்டது சிறப்பம்சமாகும் இந்நிகள்விட்க்கு பிரதம அதிதிகளாக பல கல்விமான்களும் புத்திஜீவிகளும் தொளிலதிபர்களும் கலந்துகொண்டார்கள்.
                                 பிரதம அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் அல் ஹாஜ் அபூபக்கர் சேர் அவர்களும்,சட்டத்தரணி U.L.சமீம் அவர்களும்  இலங்கை மின்சார சபை கல்முனை காரியாலயத்தை சேர்ந்த உப பொறிஇயலாளர் எம்.எல்.சலீம் சேர் அவர்களும் அல் நிஷா கோல்ட் ஹவுஸ் உரிமையாளர் அல் ஹாஜ் நிசார் அவர்களும் ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தள உரிமையாளர் NM.ஹன்ஷிப் அவர்களும்  பிறை FM சிரேஷ்ட அறிவிப்பாளர் எஸ்.எம்.எம்.ஜவாத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
                                 RDR நிறுவனத்தின் நிறுவனர் றிசாத் doctrine றியாஸ்  கூறுகையில் மிகவும் குறைந்த செலவில் வாடிக்கயாலர்களுக்கு எமது சேவைகளை வழங்குவதே எமது நோக்கம் என தெரிவித்ததோடு இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது அன்பார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்   

உலக இளைஞர் மாநாட்டில் எம் மண்ணின் மைந்தன் படம்கள் இணைப்பு

                             

                               முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினர் கௌரவ ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் அன்மையில் மொறோக்கோ நாட்டிற்குச் சென்றிருந்த விடயம் தாங்கள் அனைவரும் அறிந்ததே....
                              உலக இளைஞர் மாநாடு அண்மையில் மொறோக்கோ நாட்டில் ஜனவரி 29 யிலிருந்து 31 வரை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இலங்கை சார்பாக சவுதி அரேபிய துாதுவராலய மக்கள் தொடர்பாடல் அதிகாரியும், சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினரும் சமுகசேவயளருமாகிய ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் கலந்து கொண்டு குறிந்த மாநாட்டில் உரையாற்றுவதனை படத்தில் காணலாம்.
                              இம் மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்தும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
கௌரவ ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் உலக இளைஞர் மாநாட்டில் பங்கு பற்றி உரையாற்ற கிடைத்தமை எம் நாட்டுமக்கள் பெருமைப்படக் கூடிய ஒரு விடயமாகும்.

Thursday, February 5, 2015

RDR நிறுவனத்தின் அடுத்தகிளை நாளை சம்மாந்துறையில்






                                            RDR நிறுவனத்தின் அடுத்தகிளை RDR Travels & Tours நாளை 03/05/2015 அன்று மாலை சம்மாந்துறையில் மல்கம்பிட்டி வீதியில் திறந்துவைக்கப்பட உள்ளது பிரதம அதிதிகளாக பலபிரபலம்கள் கலந்துகொள்ள உள்ளதாக RDR நிறுவனத்தின் நிறுவனர் சமுகசேவையாளர் Risad Doctrine Riyas இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
                                           அனைத்து நாடுகளுக்குமான விசாக்கள் விமானப்பயண டிக்கட்டுகள் மற்றும் beuro சேவைகள் முதலியன மிகவும் குறைவான செலவில் செய்துகொடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார் பல வருடம்கள் அனுபவம் வாய்ந்த உத்தியோகஸ்த்தர்கள் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள் என்பது சிறப்பம்சமாகும் 

Monday, February 2, 2015

திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் சுகாதார அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பதில் நீதவான் ஜயந்த டயஸ் நானாயக்கார முன்னிலையில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11.30 அளவில் பௌதாலோக மாவத்தையில் குற்றப்புலனாய்வு பிரிவினால் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க தொடர்பில் கிடைத்த முறைப்பாடு குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது பொதுவேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வேளையில் எதிர்க்கட்சித்தலைவராக செயற்பட்ட தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தாயக்க உள்ளிட்ட 11 பேரிடம் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
விசாரணையின் பின்னர் அதுகுறித்த அறிக்கையொன்று சட்ட மாஅதிபரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தண்டனைச் சட்டத்தின் படி போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டு என்பதனால் அவரை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் அறிவித்திருந்துள்ளார்

Sunday, February 1, 2015

imo free video calls and chat

imo free video calls and chat for PC & android mobails is a very good app to get in touch with your loved ones. The best feature on this app is that, no matter what device is being used, you can make free video calls and send messages with the help of this to anyone you want. The app does not harm regular phone and SMS charges, and uses the internet connection to make the calls or send the messages.
Imo Messenger features:
  • You can send unlimited messages and make free video and voice calls over your 3G, 4G or Wi-Fi connection for free
  • Make high-quality video and voice calls
  • Group chat with friends, family, roommates and others
  • Share photos and videos
  • Express yourself with hundreds of free stickers!
  • Encrypted chats and calls
  • Optimized for Android tablets
Limitations:
Required Android 1.6 or higher
Required Bluestack Android Emulator

கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date)

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா?
காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.
படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.
முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.
இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.
A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.
A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)
B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)
C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)
D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)
உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"
அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எமது பத்திரிகையில் சில






எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

                         
மசகு எண்ணெய் விலை மீண்டும் கணிசமான அளவு அதிகரிக்கலாம் என ஒபெக் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒபெக் அமைப்பின் செயலாளர் கூறுகையில் மசகு எண்ணெய் விலை தற்பொழுது பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவித்தார்

                                     எனினும் இவ்விலையில் மாரிய மாற்றங்கள் விரைவில் ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார். 
இவ்வருடத்தில் முதல் ஆறு மாதங்களில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பைக் காட்டாது என பொருளியல் நிபுணர்கள் கூறியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.