ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

ஹன்ஷிப் பில்லா தமிழ் இணையத்தளம்

Thursday, June 11, 2015

ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு: ஆசிரியை ராஜினாமா!

தலையில் ஸ்கார்ப் அணிந்து பள்ளிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளது பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பு உருவாகியுள்ளது.

கேரள சமாஜத்தின் நிர்வாகத்தில் ஜூபில என்ற பள்ளிக்கூடம் பெங்களூருவில் செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஷினா என்ற ஆசிரியைக்குக் கடந்த மே மாதம் வேலை கிடைத்தது. ஜூனில் பள்ளி திறந்ததும் ஹாஷினா வேலைக்குச் சென்றுள்ளார்.
தலையில் ஸ்கார்ப் அணிந்து வேலைக்கு வந்த ஆசிரியை ஹாஷினாவிடம் முதல் நாளிலேயே, "இதற்குப் பள்ளி நிர்வாகம் எதிரானது. எனவே தலையிலிருந்து ஸ்கார்ப்பினை நீக்க வேண்டும்" என பள்ளி தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்கார்ப் அணிந்து வேலை செய்ய அனுமதி கிடைக்காது என உறுதியான நிலையில் தன் வேலையை ஹாஷினா ராஜினாமா செய்தார். மேலும், சம்பவம் குறித்து மாநில முதல்வர் மற்றும் சிறுபான்மை கமிசன்களுக்குப் புகாரும் அளித்துள்ளார்.
இச்சம்பவம் வெளியானதும் "தலைமை ஆசிரியையின் அறிவுரையை பள்ளி நிர்வாகத்தோடு சம்பந்தப்படுத்தி குறிப்பிட்ட ஆசிரியை தவறாக புரிந்துள்ளார். அவ்வாறான தடையேதும் பள்ளி நிர்வாகம் போடவில்லை. ஆசிரியையின் ராஜினாமா கடிதம் பள்ளிக்கு இன்னும் கிடைக்கப்பெறவும் இல்லை" என பள்ளி நிர்வாகமான கேரள சமாஜம் அறிவித்துள்ளது.
தலையில் ஸ்கார்ப் அணிய விடாததைத் தொடர்ந்து ஆசிரியை ராஜினாமா செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, April 19, 2015

Wednesday, April 8, 2015

இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கருமை நீங்க சில அற்புத வழிகள்

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள். 
மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.

இதற்காக வேலைப்பளு அதிகம் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க ஆண்களும் பல வழிகளை பின்பற்றி வருகின்றனர். எனவே கோடையில் கருமையாகும் சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்ற சில அற்புதமான இயற்கை வழிகளை  பட்டியலிட்டுள்ளது. இந்த இயற்கை வழிகள் அனைத்தும் பாதுகாப்பானவையே. ஆகவே அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி, உங்கள் சருமத்தின் நிறத்தை பாதுகாப்பதோடு, அதிகரித்துக் கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடா பேஸ்ட்

பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

வாழைப்பழம் மற்றும் பால்

வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.

சூரியகாந்தி விதை

இரவில் படுக்கும் போது சூரியகாந்தி விதையை பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதில் சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

மாம்பழத் தோல்

மாம்பழத்தின் தோலை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சூரியக்கதிர்களால் கருமையான சருமம் வெள்ளையாகி பொலிவோடு மின்னும்.

தேன்

தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக்

சர்க்கரை

சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள தழும்புகள், கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகும்.

தண்ணீர் குடிக்கவும்

முக்கியமாக தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும். அதிலும் தினமும் குறைந்தது 9 டம்ளர் தண்ணீரை அவசியம் குடிக்க வேண்டும்.

நன்கு தூங்கவும்

தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கருவளையங்கள் நீங்கி, முகம் இயற்கையான அழகுடன் காணப்படும்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க அற்புதமான வழிகள்! please share it

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டும் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது அவர்களை அழகாக காண்பிப்பதற்கு மாறாக அசிங்கமாக வெளிக்காட்டும். 
அதுமட்டுமின்றி, மஞ்சள் நிற பற்கள் ஒருவரின் மீது உள்ள மதிப்பையும் குறைக்கும். ஆகவே ஒவ்வொருவரும் தங்கள் பற்களை வெள்ளையாகவும், வாயை துர்நாற்றமின்றியும் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

அதற்கு தினமும் 2 முறை பற்களை துலக்குவதுடன், பற்களை வெண்மையாக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டும் பற்களைப் பராமரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காபி, டீ, சிகரெட் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

 இங்கு பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க உதவும் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சமையலறைப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன்படி தவறாமல் செய்து சந்தால், பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ளலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதனைக் கொண்டு 2 நிமிடம் பற்களை துலக்கி கழுவ வேண்டும். இப்படி முதல் வாரம் இரண்டு முறையும், பின் 15 நாட்களுக்கு ஒருமுறையும் செய்ய வேண்டும். குறிப்பு: பேக்கிங் சோடாவை தினமும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை பற்களின் எனாமலை பாதிக்கும்.

ஆரஞ்சு தோல்

இரவில் படுக்கும் போது ஆரஞ்சு பழத்தின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, மறுநாள் காலையில் பற்களை கழுவ வேண்டும். இதனால் ஆரஞ்சு பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி மற்றும் கால்சியம் பற்களில் உள்ள மஞ்சள் நிற கறைகளை நீக்கி, பற்களின் வலிமையை அதிகரிக்கும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளது. இதனால் அவை பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கும். அதற்கு ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு தினமும் இரண்டு முறை கற்களை தேய்த்து வந்தால், பற்கள் பளிச்சென்று மாறும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாயைக் கொப்பளித்தால், மஞ்சள் நிற கறைகளைப் போக்கலாம். முக்கியமாக அப்படி கொப்பளிக்கும் போது, அதை விழுங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், அவை எத்தகைய கறையையும் எளிதில் நீக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து 2 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவ வேண்டும். இப்படி 2 வாரங்களுக்கு தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாகும்.

உப்பு

தினமும் பற்களை துலக்கும் போது, பேஸ்ட்டில் சிறிது உப்பு தூவி, பற்களை துலக்கினால், பற்களில் உள்ள கறைகள் நீங்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக அழுத்தி தேய்த்தால், பற்களில் உள்ள எனாமல் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படும்.

துளசி

துளசி இலையை வெயிலில் சில மணிநேரம் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, அதனை தினமும் பேஸ்ட் உடன் சேர்த்து பற்களை துலக்கி வந்தால், மஞ்சள் கறைகள் அகலும்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, பற்களையும் வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ளலாம். அதேப்போன்று கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டு வந்தாலும் பற்கள் வெள்ளையாகும்.

சாம்பல் மற்றும் அடுப்புக்கரி கொண்டு பற்களை துலக்க வேண்டாம் என கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அலைஹிவசல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் 

9/4/2015 இன்றைய நாணய மாற்று விகிதம் இலங்கை

Sri Lanka Rupee1 Rupeein Rupees
British Pound     British Pound0.0051197.8
     Euro0.007143.4
Swiss Franc     Swiss Franc0.0073137.7
     American Dollar0.0075133
Canadian Dollar     Canadian Dollar0.0094106
     Australian Dollar0.0098102.2
Chinese Yuan Renminbi     Chinese Yuan Renminbi0.046621.45
     Russian Ruble0.4022.486
Indian Rupee     Indian Rupee0.4682.139
     Japanese Yen0.9031.107
Thu, 9 April, 2015 00:20:04 (AST)
Sri Lanka Rupee1 Rupeein Rupees
Algerian Dinar     Algerian Dinar0.7341.362
     American Dollar0.0075133
Argentine Peso     Argentine Peso0.066515.04
     Australian Dollar0.0098102.2
Bitcoin     Bitcoin032576
     Brazilian Real0.022943.63
British Pound     British Pound0.0051197.8
     Bulgarian Lev0.013673.32
Canadian Dollar     Canadian Dollar0.0094106
     Chilean Peso4.60.2175
Chinese Yuan Renminbi     Chinese Yuan Renminbi0.046621.45
     Croatian Kuna0.05318.86
Czech Koruna     Czech Koruna0.1915.234
     Danish Krone0.052119.19
Egyptian Pound     Egyptian Pound0.057417.43
     Euro0.007143.4
Hong Kong Dollar     Hong Kong Dollar0.058317.16
     Hungarian Forint2.070.4834
Iceland Krona     Iceland Krona1.030.972
     Indian Rupee0.4682.139
Indonesian Rupiah     Indonesian Rupiah97.60.0102
     Iranian Rial2120.0047
Israeli New Shekel     Israeli New Shekel0.029633.84
     Japanese Yen0.9031.107
Korean Won     Korean Won8.220.1217
     Malaysian Ringgit0.027336.66
Mexican Peso     Mexican Peso0.1128.921
     New Zealand Dollar0.01100.4
Nigerian Naira     Nigerian Naira1.50.6682
     Norwegian Krone0.060616.51
Pakistan Rupee     Pakistan Rupee0.7661.305
     Philippine Peso0.3342.992
Polish Zloty     Polish Zloty0.02835.77
     Qatari Rial0.027436.54
Romanian Leu     Romanian Leu0.030732.59
     Russian Ruble0.4022.486
Saudi Riyal     Saudi Riyal0.028235.46
     Serbian Dinar0.8371.195
Singapore Dollar     Singapore Dollar0.010298.02
     South African Rand0.088911.25
Swedish Krona     Swedish Krona0.065215.34
     Swiss Franc0.0073137.7
Taiwan Dollar     Taiwan Dollar0.2344.275
     Thai Baht0.2454.085
Turkish Lira     Turkish Lira0.019551.18
     Ukraine Hryvnia0.1775.657
Un. Arab Emirates Dirham     Un. Arab Emirates Dirham0.027636.21